முகப்பு இதழ்கள் நிகழ்ச்சிகள் சேவைகள் அமைப்பு செய்திகள் தலைமைச்செய்திகள் தொடர்புக்கு
flash அல்ஹம்துலில்லாஹ் லண்டனில் 3 வருடத்தில் 5000 பேர் இஸ்லாத்திற்க்கு திரும்பினார்கள் பிரிட்டன் அரசு கலக்கம்,செய்தி : தினகரன் 10ம் தேதி பத்திரிக்கை, பக்கம் : 12.......மனிதாபிமானிகளைக் கொன்ற மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிப்போம் .....வேலைவாய்ப்பு : இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு போலிஸ், தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் 10117 பேரில் (3.5 % கோட்டா) 354 முஸ்லிம்கள் நுழைய வாய்ப்பு! தகுதி : எஸ்.எஸ்.எல்.சி..வயது : 18..பரிட்ச்சையின் தேதி : 08-08-2010,
திருக்குர்ஆன்வழங்கும்நிகழ்ச்சி ஊடகங்களில் துண்டுபிரசுரங்கள் கிளைகள் விடியோ
 
மார்க்க விளக்க்ங்கள்


இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!



தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்


ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


அபுலஹபின் விரலில் வடியும் பால்


புர்தா ஷரீப் கூறும் புரூடா


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்


அபூஹுரைரா [ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!


உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,


எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!



முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)


உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள
   
   


இஸ்லாத்தின் அடிப்படை


மனனம் செய்வோம்
   
free invisible web counter
பார்வையாளர்கள்
 
வின் டிவியில்... வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m   10:30p.m
 
முந்திய செய்திகள்

ஜூன் 2010

மே 2010

ஏப்ரல் 2010

மார்ச் 2010

பிப்ரவரி 2010

ஜனவரி2010

டிசம்பர்2009
 
 

 

உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

நபி[ஸல்] அவர்களின் மதீனா வாழ்வை நாம் படித்துப்பார்த்தால், அவற்றில் பல்வேறு இடங்களில் நபியவர்களோடு தொடர்புடையவர்களாக அபூதல்ஹா(ரலி) உம்மு ஸுலைம் (ரலி) தம்பதியை நாம் காணலாம்.
இந்த தம்பதிகளுக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு. இவ்விருவரும் இறைக்கட்டளையை அப்படியே பேனக்கூடியவர்களாக, இறைத்தூதரின் விருப்பத்திற் குரியவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் சீரிய அறிவாற்றலும் மதிநுட்பமும் பொருந்தியவர்களாக திகழ்ந்தார்கள். எப்படிப்பட்ட சோதனையான கட்டத்திலும் அதை பொறுமையுடன் எதிர்கொண்டு அதை நன்மையாக மாற்றக் கூடியவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு கீழ் காணும் சான்றே போதுமானது.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்;
என் தாயார் உம்மு ஸுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த பொழுது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு ஸுலைம் (துக்கத்தை வெளிக் காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னாள் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு ஸுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள்.
அதன்பிறகு, உம்மு ஸுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) அவர்கள் இறைத்தூதர் அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவு கொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர் அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.
பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பி யிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள். ஆதாரம்; புஹாரி எண் 5470
இந்த பொன்மொழியில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு முஸ்லிமான ஆணுக்கும்-பெண்ணுக்கும் ஆயிரம் படிப்பினை தரும் விஷயமாகும்.
பொதுவாகவே ஒருவர் இறந்துவிட்டால் அதிலும் குறிப்பாக தமது பிள்ளை இறந்துவிட்டால் ஆணை விட பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதில் முன்னிலை வகிப்பதை நாம் நடைமுறை யில் பார்க்கிறோம். இங்கே தமது [கணவனின்] மகன் இறந்த போது, உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை . முதலாவதாக அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்கிறார்கள். அடுத்து வெளியே சென்றுள்ள கணவர் திரும்பி வந்தவுடன் மகன் இறந்த சோகத்தை மறைத்து கணவரை உபசரிக்கிறார்கள்.
கணவனோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். இந்த விஷயத்தில் கணவனின் மனநிலை அறிந்து செயல்படும் ஒரு சிறந்த மனைவியாக திகழ்ந்து உள்ளார்கள். அடுத்து தன் மகன் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் கேட்டபோது, உங்கள் மகன் இறக்கவில்லை என்று சொல்லியிருந்தால் அது பொய்யாகிவிடும் என்பதால், மிகவும் சாதுர்யமாக உண்மையை வேறு வார்த்தையில் அதாவது 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று கூறி, எந்த நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்ற மார்க்க கட்டளையை பேணி காத்ததன் மூலம் மிகச்சிறந்த இறையச்சமுடையவராக திகழ்கிறார்கள்.
உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இந்த செயல் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, நபியவர்கள் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை கண்டிக்காமல் அவர்களின் செயல்களை அங்கீகரிக்கும் வகையில், 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்திக்கிறார்கள் என்றால் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் என்று விளங்கிக்கொள்ளலாம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 6424 ]
மேலும் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர் என்று நபி[ஸல்] அவர்களின் மற்றொரு பொன்மொழியின் வாயிலாக உணர முடிகிறது;
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். (ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3679 )
[உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இயற்பெயர் அர்ருமைஸா பின்த் மில்ஹான் என்பதாகும்]
எல்லாம் வல்ல அல்லாஹ் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக! தியாகத்தையும், இறையச்சத்தையும் வாழ்க்கையாக கொண்ட அவர்களைப்போல் நம்மையும் வாழ்ந்து மரணிக்க செய்வானாக!

   
   
 

மக்கள் ரிப்போர்ட்

headlines

இந்த வார இதழில்..

ஜூன் (04-10)


1.10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சாதித்துக் காட்டிய முஸ்லிம் மாணவிகள்



2. மத்தியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடிகிறது! - ஹஜ் கமிட்டி தலைவர் "பளிச்' பேட்டி



3.முந்திச் செல்லும் அரசுப் பள்ளிகளும் - பின்தங்கும் தனியார் பள்ளிகளும்



4.மக்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகள்!


5.இந்தியாவை அவமானப்படுத்திய கனடா



6.தீப்பற்றி எரியும் தீயணைப்புத் துறை திருவல்லிக்கேணி திகு! திகு!!



7.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐஎன்டிஜே உதயமாகியிருந்தால்.... டாக்டர். அப்துல்லாஹ் சிறப்பு பேட்டி