கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றவழிகாட்டுதல் எனும் பெயரில் நாட்டில் நடைபெறும் அனைத்து திரமணங்களைப் பதிவு செய்திட சட்ட முன் வடிவு தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட உடனúயே அதன் அறிமுக நிலையிலயே இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதனை கடுமையாக எதிர்த்தது.
கட்டாய திருமண பதிவுச் சட்டம் சம்பந்தமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ள ஐயப்பாடுகளை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்துத் தெரிவிப்பதற்கு முன்பாக உரிய திருத்தங்கள் பற்றி அரசு அதிகாரிகளிடம் ஆலோசிப்பதற்காக கீழ்க்காணும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்பியா என்னும் மார்க்க ஒழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில செயலாளர்கள் அப்துல் ஹமீது, முஹம்மது ஷிப்லி, வேளச்சேரி சிராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.