முகப்பு இதழ்கள் நிகழ்ச்சிகள் சேவைகள் அமைப்பு செய்திகள் தலைமைச்செய்திகள் தொடர்புக்கு
flash அல்ஹம்துலில்லாஹ் லண்டனில் 3 வருடத்தில் 5000 பேர் இஸ்லாத்திற்க்கு திரும்பினார்கள் பிரிட்டன் அரசு கலக்கம்,செய்தி : தினகரன் 10ம் தேதி பத்திரிக்கை, பக்கம் : 12.......மனிதாபிமானிகளைக் கொன்ற மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிப்போம் .....வேலைவாய்ப்பு : இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு போலிஸ், தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் 10117 பேரில் (3.5 % கோட்டா) 354 முஸ்லிம்கள் நுழைய வாய்ப்பு! தகுதி : எஸ்.எஸ்.எல்.சி..வயது : 18..பரிட்ச்சையின் தேதி : 08-08-2010,
திருக்குர்ஆன்வழங்கும்நிகழ்ச்சி ஊடகங்களில் துண்டுபிரசுரங்கள் கிளைகள் விடியோ
 
மார்க்க விளக்க்ங்கள்


இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!



தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்


ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


அபுலஹபின் விரலில் வடியும் பால்


புர்தா ஷரீப் கூறும் புரூடா


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்


அபூஹுரைரா [ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!


உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,


எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!



முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)


உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள
   
   


இஸ்லாத்தின் அடிப்படை


மனனம் செய்வோம்
   
free invisible web counter
பார்வையாளர்கள்
 
வின் டிவியில்... வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m   10:30p.m
 
முந்திய செய்திகள்

ஜூன் 2010

மே 2010

ஏப்ரல் 2010

மார்ச் 2010

பிப்ரவரி 2010

ஜனவரி2010

டிசம்பர்2009
 
 

 

எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமான ஆண்களுக்கு அதிகபட்சமாக நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை நாம் அறிவோம். இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் மிக மிக குறைவு. காரணம் பொருளாதரா பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், மறு பக்கம் இரு மனைவியர் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு மத்தியில் பஞ்சாயத்து தீர்ப்பதற்கே பெரும்பான்மை யான நேரம் ஒதுக்க வேண்டிய நிலை.

இரு ஆண்கள் ஒத்துப்போய் விடுவார்கள். ஆனால் இரு பெண்கள் ஒத்துப்போவது என்பது மிக மிக அரிது. அதிலும் ஒரு கணவருக்கு வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள், இவர்களில் ஒவ்வொருவரும் மற்ற மனைவியை தன் கணவன் நெருங்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று சதா யோசித்து தங்களில் ஒருத்தியை மாட்டிவிடும் வாய்ப்பு கிடைக்குமென்றால் அதை கச்சிதமாக பயன்படுத்தி அவளிடமிருந்து தன் கணவனை பிரித்துவிடுவாள்.

தன் கணவன் மறுமணம் செய்வதை அனுமதிக்கும் அரபு நாட்டு பெண்கள் பெரிய அளவில் தனது சக்காளத்தியை கண்டுகொள்வதில்லை. ஆயினும் அவர்களில் சிலர் தனது கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்வதாக அறிகிறோம். சமீபத்தில் குவைத்தில் ஜஹ்ரா என்ற பகுதியில் ஒரு திருமணத்தின் போது நடந்த தீவிபத்திற்கு ஒரு முன்னாள் மனைவியே காரணம் என்று கூறப்பட்டது.[அல்லாஹ்வே அறிந்தவன்] இதை நாம் இங்கு குறிப்பிட காரணம் பொதுவாகவே பெண்கள், கணவன் குடிகாரனாகவோ, சூதாடியாகவோ, குடும்பத்தை சரிவர கவனிக்காத பொருப்பில்லாதவனாகவோ இருந்தால்கூட சகித்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள்.

ஆனால் ஒரு உதவாக்கரை கணவனைக்கூட இன்னொரு பெண்ணிற்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது பெரும்பான்மையான பெண்களின் இயல்பு. ஆனால் ஸஹாபி பெண்களை பொறுத்த வரையில் அல்லாஹ் அனுமதித்த எந்த ஒன்றையும் தடுக்கக் கூடியவர்கள் அல்லர். எனவே பெரும்பான்மையான ஸஹாபாக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்ததை நாம் ஹதீஸ்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் பல மனைவியரை மணக்கும் அனுமதி தந்திருந்தான். நபி[ஸல்] அவர்களும் சுமார் பதினொரு அல்லது பனிரெண்டு மனைவியரை மணந்தார்கள். இந்த மனைவியருக்குள் நபியவர்களின் அன்பை பெறுவதில் போட்டி இருந்தது. இதை நாமாக சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரிய அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொல்கிறார்கள்;
அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் ஸவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு ஸலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2581 ]
மற்றொரு ஹதீஸில் நம் அன்னையர்களுக்கு மத்தியில் நபியவர்களின் நெருக்கத்திற்குரியவர்களாக இருப்பதில் போட்டியிருந்ததை காணலாம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் 'நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, 'நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கி 'நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)' என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான். ஆதாரம்; புஹாரி எண் 5267
இவ்வாறாக நம் அன்னையர்களுக்கு மத்தியில் பெண்களுக்கே உரித்தான போட்டி மனப்பான்மை இருந்தாலும், அவர்களுக்கிடையே பகைமையோ, ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் என்னமோ, பழிவாங்கும் நோக்கமோ கடுகளவும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.

அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பாவிகள் அவதூறு சொனன்போது, இது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து நபி [ஸல்] அவர்கள், அலீ[ரலி] உஸாமா[ரலி] பரீரா[ரலி] உள்ளிட்ட சிலரிடம் ஆலோசனையும் கருத்துக்களும் கேட்டது போன்று அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடமும் கருத்து கேட்டார்கள். அப்போது அன்னையவர்கள் கூறிய வார்த்தை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை;
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?... அல்லது (அவர் விஷயத்தில்) என்னபார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4141 ]
அழகிலும், நபி [ஸல்] அவர்களின் அன்பிலும் எனக்கு போட்டியாக இருந்தவர் ஸைனப் என்று வர்ணிக்கும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் வாயாலேயே, அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையால் சிலாகித்து அன்னை ஆயிஷா[ரலி] அவர்களே சொல்லுமளவிற்கு அன்னை ஸைனப்[ரலி] அவர்களின் உள்ளம் இறையச்சத்தால் நிரம்பியிருந்ததை காண்கிறோம்.

அதனால்தான் தன்னை போட்டியாக கருதிய ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பழி சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோதும், அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆயிஷா[ரலி] அவர்கள் விஷயத்தில் உள்ளதை மட்டும், உண்மையை மட்டும், நன்மையை மட்டும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அதுதான் ஸஹாபாக்கள்.

இதே நிலை இன்றைய பெண்களிடம் நடந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே! எனவேதான் தெளிவாக சொல்கிறோம் இறையச்சத்திலும் சரி, அமல்களிலும் சரி, நன்னடத்தையிலும் நற்குணத்திலும் சரி அந்த ஸஹாபாக்கள் மற்றும் ஸஹாபி பெண்களின் அந்தஸ்த்தில் கடுகளவும் எட்டிப்பிடிக்கமுடியாது என்பதே உண்மை. இந்த இலட்சணத்தில், அந்த மேன்மக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அகம்பாவ பிரச்சாரம் வேறு!
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

   
   
 

மக்கள் ரிப்போர்ட்

headlines

இந்த வார இதழில்..

ஜூன் (04-10)


1.10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சாதித்துக் காட்டிய முஸ்லிம் மாணவிகள்



2. மத்தியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடிகிறது! - ஹஜ் கமிட்டி தலைவர் "பளிச்' பேட்டி



3.முந்திச் செல்லும் அரசுப் பள்ளிகளும் - பின்தங்கும் தனியார் பள்ளிகளும்



4.மக்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகள்!


5.இந்தியாவை அவமானப்படுத்திய கனடா



6.தீப்பற்றி எரியும் தீயணைப்புத் துறை திருவல்லிக்கேணி திகு! திகு!!



7.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐஎன்டிஜே உதயமாகியிருந்தால்.... டாக்டர். அப்துல்லாஹ் சிறப்பு பேட்டி